தொடர்ந்தும் துடுப்பாட்டத்தில் தடுமாறும் இந்தியா
இந்திய(India) மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று(3) தொடங்கியது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
அவுஸ்திரேலிய அணி
இதனையடுத்து முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 181 ஓட்டங்களிற்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்மூலம் 4 ஓட்டங்கள் முன்னிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து, அடுத்தடுத்து, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி என அனைவரும் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி
இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக மாற்றி தொடர்ந்து அதிரடியாக விளையாடி (29 பந்தில்) அரை சதம் கடந்தார்.
அவர் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இதனால் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியா சார்பில் போலண்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |