பிரித்தானிய சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரிக்கு நடந்த விபரீதம்
பிரித்தானியாவிலுள்ள சிறை ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கொலை முயற்சி இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் டர்ஹாம்(Durham) கவுண்டியில் உள்ள பிராங்க்லாண்ட் சிறையில்(Frankland Prison) கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் திணைக்களத்தின் துப்பறியும் அதிகாரி ஒருவரே சிறைக்கைதி ஒருவரால் மார்பில் தாக்கப்பட்டுள்ளார்.
கொலை முயற்சி குற்றச்சாட்டு
இதையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி, தற்போது வீட்டிலிருந்து ஓய்வெடுத்து வருவதாக டர்ஹாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்ட சிறைக்கைதி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, 62 வயதுடைய டேவிட் டெய்லர்(David Taylor) என்ற சந்தேக நபரே தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் தற்போது காவலில் வைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

சித்திரவதை செய்யும் மாமியார் நான் அல்ல... ஆதாரத்தை வெளியிடுங்கள் : ரவி மோகனுக்கு சவால் விட்ட மாமியார்! Manithan

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
