பிரித்தானியாவில் 8 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சுற்றுலாப் பயணியான 11 வயது சிறுமி
பிரித்தானியாவில் சுற்றுலா பயணியாக சென்றிருந்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் 8 முறை கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் லெய்செஸ்டர் சதுக்கம்(Leicester Square) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான சிறுமி, அவரது தாயாருடன் இருந்த போதே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தாக்குதல் சம்பவம்
இந்த தாக்குதலில், சிறுமிக்கு முகம், தோள்பட்டை, கழுத்து பகுதி ஆகியவற்றில் காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றும் அவர்களது வழக்கறிஞர் டேவிட் பர்ன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 32 வயதுடைய ஐயோன் பிண்டாரு(Ioan Pintaru) என்ற நிலையான முகவரி இல்லாத ருமேனிய குடிமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாதிக்கப்பட்ட சிறுமியை அடைந்து அவரது கழுத்தை அசைய விடாமல், 8 முறை சிறுமியின் உடலை கத்தியால் குத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி Old Bailey நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
