கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்! பொதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பயணியான சந்தேகநபர் இன்று (13) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் குருநாகல், மாவதகம, அம்பகோட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.
மேலதிக விசாரணைகள்
இவர் இன்று அதிகாலை 12.30 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் EY-390 விமானத்தில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

இவர் இரண்டு சூட்கேஸ்களில் 38,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 190 சிகரெட் அட்டைப்பெட்டிகளை மறைத்து வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக 03/18 அன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam