இஸ்ரேல் - காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்கள் தொடர்பாக வெளியான தகவல்
கடந்த ஆண்டு ஒக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் - காசா போரில் இதுவரை 40,000இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் (Hamas) நடத்தி வரும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நிலப்பரப்பில் இது 1.7 % ஆகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், செயற்கைக்கோள் புகைப்படங்களின் தரவுபடி 60% கட்டிடங்கள் காசாவில் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஃபா நகரம்
மேலும், தரவுகளின் படி கடந்த சில மாதங்களாக பெரிதும் பாதிக்கப்பட்ட காசாவின் நகரமாக ரஃபா உள்ளது.
அதேவேளை, ஹமாஸின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த தரவுகளில், போராளி மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை பிரித்து காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
