நாட்டை உலுக்கிய அட்டலுகம சிறுமியின் மரணம் : இரண்டு வருடங்களின்பின் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு
கடந்த 2022ஆம் ஆண்டு அட்டலுகம பகுதியில் ஆயிஷா என்ற 9 வயதுடைய சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு 27 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை உயர் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டை உலுக்கிய மரணம்
இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவித்துள்ளது.
பண்டாரகம, அட்டலுகம பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் முழு நாட்டையும் உலுக்கிய கொடூரச் சம்பவமாக பதிவானது.
கோழி வாங்குவதற்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமி காணாமல் போன நிலையில், மறுதினம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில், சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்தநிலையிலேயே, குறித்த சந்தேகநபருக்கு இன்றையதினம் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்..
சடலமாக மீட்கப்பட்ட அட்டலுகம சிறுமி! பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல் |
காணாமல் போன அட்டலுகம சிறுமி சடலமாக மீட்பு (Photo) |
அட்டலுகம சிறுமிக்கு நடந்தது என்ன - பொலிஸார் தீவிர விசாரணை |
சடலமாக மீட்கப்பட்ட அட்டலுகம சிறுமி! பெற்றோருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி |
ஆயிஷா படுகொலை வழக்கு - சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு |
சிறுமி ஆயிஷாவை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் இன்று வழங்கப் போகும் வாக்குமூலம் |
பண்டாரகம சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல் |
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |