விருந்துக்கு வருமாறு அழைத்து கணவன் மனைவியை தாக்கிய நபர்கள்:பெண் மரணம்
கணவன் மற்றும் மனைவியை விருந்துக்கு வருமாறு அழைத்து பொருப்பன பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களில் தாக்கியதில் பெண் உயிரிழந்துள்ளார்.
அவரது கணவர் படுகாயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விருந்துக்கு செல்ல பாலத்திற்கு அருகில் வருமாறு அழைத்த சந்தேக நபர்கள்
விருந்து ஒன்றில் கலந்துக்கொள்ள செல்வதற்காக பொருப்பன பாலத்திற்கு அருகில் வருமாறு கூறி கணவன், மனைவியை அந்த இடத்திற்கு வரவழைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அப்போது பிரதேசவாசிகள் அந்த இடத்திற்கு சென்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
ஒரு சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பிரதேசவாசிகள்
தப்பிச் செல்ல முயற்சித்தவர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பிடிப்பட்ட நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண் 34 வயதானவர் எனவும் படோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த அவர் பொரலஸ்கமுவை விகாரை மாவத்தையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
