14 வயது சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்ற இளைஞன்: பொலிஸார் எடுத்த நடவடிக்கை
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்ற இளைஞன் தாக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கிண்ணியா, சூரங்கள் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய பாடசாலை
மாணவியை நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் காதலித்து திருமணம்
செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த இளைஞர் சிறுமியை நேற்று(26) குருநாகல் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் இருவரையும் விசாரணை செய்தபோது சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சிறுமியின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதைடுத்து இளைஞனை
தாக்கியுள்ளனர்.
இதேவேளை பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து இளைஞரை கைது செய்து சட்ட வைத்திய அதிகாரியிடம் சோதனைக்காக கொண்டு சென்ற போது இளைஞருக்கு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 14 வயது சிறுமியை சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் இளைஞரை கைது செய்து பொலிஸ் கண்காணிப்பில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
