கிளிநொச்சியில் கடை ஒன்றின் மீது தாக்குதல்
கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவன் கொட்டி சந்தி பகுதியில் உள்ள பெட்டிக்கடை மீது இன்றைய தினம்(02) வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கிளிநொச்சி தட்டுவன் கொட்டி சந்தியில் உள்ள குறித்த கடைக்கு அருகாமையில் டிப்பர்கள் நிறுத்தி வைப்பது வழக்கம்.
வாய்த்தர்க்கம்
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் மதியம் 12 மணியளவில் கடைக்குள் இருந்த நபருடன் டிப்பர் உரிமையாளர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு முரண்பட்டுள்ளார்.
கடை உரிமையாளர் மீது கத்தியால் குத்த முயற்சி அப்போது கடை உரிமையாளர் இவ்விடத்தில் முறைக்கேடான வார்த்தைகள் பேச வேண்டாம் என கூறியபோது டிப்பர் உரிமையாளர் கடையினை தாக்கி கடை உரிமையாளர் மீது கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார்
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறைக்கு அறிவித்த போதும் இதுவரைக்கும் சம்மந்தப்பட்ட இடத்திற்கு அவர்கள் இதுவரை வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.






