கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தொழிலதிபர்
கொழும்பில் உள்ள City of Dreams ஹோட்டலின் சொகுசு அறையில் செவ்வாய்க்கிழமை மாலை 45 வயதுடைய ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கண்டியை சேர்ந்த நபர், City of Dreams ஹோட்டலில் நான்கு நாட்களாக தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது அறையின் கதவு மூடப்பட்டிருந்தபோது சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம் தூக்கில் தொங்கியமையே என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரை மாய்த்துள்ளார் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும் City of Dreams வளாகத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட கேசினோவில் சூதாட்டத்தில் பெரும் தொகை பணத்தை இழந்த நிலையில் விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



