தங்காலை ஐஸ் போதைப்பொருள் விவகாரம் : மற்றுமொருவர் அதிரடியாகக் கைது
தங்காலை, சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொகையுடன் தொடர்புடைய மற்றொரு நபர் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
'பெலியட்டா சனா' என்று அழைக்கப்படும் சந்தேக நபர் நேற்று (01.10.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூமிதேலா என்று அழைக்கப்படும்
சமீபத்தில், சீனிமோதரவில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 கிலோகிராம் ஹெரொயின் மற்றும் படிக மெத்தம்பேட்டமைன் ('ஐஸ்') ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த போதைப்பொருள் தொகை வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு கடத்தப்பட்டு போக்குவரத்துக்கு தயாராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த போதைப்பொருள் சரக்கு வெளிநாட்டைச் சேர்ந்த 'உனகுருவ சாந்த' என்ற கடத்தல்காரருக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தேக நபர்களைப் பிடிக்க பொலிஸார் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையிலேயே, 'பெலியட்டா சனா' கைது செய்யப்பட்டுள்ளார்,
அவர் "பூமிதேலா" என்று அழைக்கப்படும் முக்கிய சந்தேக நபரின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படுகிறது.
மற்றொரு வீட்டையும்
மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போதைப்பொருள் பதுக்கி வைப்பதற்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மற்றொரு வீட்டையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தங்காலை, மரகொல்லியவில் அமைந்துள்ள இந்த வீடு, போதைப்பொருட்களை மறைத்து வைக்க பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், நாட்டிற்குள் நடைபெறும் அனைத்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்புடைய குற்றங்களும் விரைவாகவும் தீர்க்கமாகவும் கையாளப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri

தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
