பரபரப்பாகும் தமிழகம்.. டெல்லி பறக்கும் விஜய்! ராஜபக்சவாகும் முதலமைச்சர் ஸ்டாலின்
கரூர் சம்பவம் தொடர்பில் போலியான செய்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டப்பட்டு ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மூத்த ஊடகவியலாளரான அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியாத அளவுக்கு ஆளும் திமுக அரசாங்கத்தின் அழுத்தம் ஏனைய ஊடகங்களுக்கு உள்ளது.
இந்த விடயம் இலங்கையில் ராஜபக்சர்களுக்கு எதிராக பேசிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை நினைவூட்டுகின்றது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ராஜபக்சக்களை போன்ற ஒருவர் என இந்த சம்பவம் எடுத்துரைக்கின்றது.
இவ்வாறிருக்க, கரூர் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான ஒருவர் ஆணையம் தொடர்பில் நம்பிக்கை இல்லை என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், உண்மையை அறிவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டெல்லி சென்று எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
