அஸ்வெசும சமூக நலன்புரி திட்டம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு(Video)

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Jeevan Thondaman Sri Lanka Government Economy of Sri Lanka
By Thirumal Jun 28, 2023 12:38 PM GMT
Report

அஸ்வெசும சமூக நலன்புரி கொடுப்பனவைப் பெறுவதற்குத் தகுதி இருந்தும் உத்தேச பெயர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால் அது தொடர்பில் எதிர்வரும் ஜுலை 10 ஆம் திகதிக்குள் மேன்முறையீடு செய்யுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

மக்களை வீதிகளுக்கு இறக்கி போராட்டங்களை நடத்துவதைவிட, அவர்களை மேன்முறையீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு அரசியல் பிரமுகர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பில் அமைச்சில் இன்றைய தினம் (28.06.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


சமுர்த்தி கொடுப்பனவு

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பெயர் பட்டியலைத் தயாரிக்கும்போது பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்ற கோரிக்கை எம்மால் முன்வைக்கப்பட்டது.

உலக வங்கி மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகியோருடனும் இது தொடர்பில் பேச்சு நடத்தி, தீர்வொன்றைப் பெற்றிருந்தோம்.

ஏனெனில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஈ.பி.எப், ஈ.டி.எப் பிடிபடுவதால் சமுர்த்தி கொடுப்பனவின் போது கடந்த காலங்களில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இம்முறை அந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டது.

அஸ்வெசும திட்டத்தில் புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது எனக் கூறி தலவாக்கலையில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அஸ்வெசும சமூக நலன்புரி திட்டம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு(Video) | Aswesuma Welfare Protest In Sri Lanka

மேன்முறையீட்டு உதவியை நாடலாம்

இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது என எண்ணத்தோன்றுகிறது. போலியான முறையில் தகவல்களும் பரப்பட்டு வருகின்றன. இதனை எம்மால் ஏற்க முடியாது.

அஸ்வெசும திட்டம் தொடர்பில் ஜுலை 10 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய முடியும். 'ஒன்லைன்' ஊடாகவும், பிரதேச செயலகங்களிலும் அதனைச் செய்யலாம். தமது பெயர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் மேன்முறையீட்டு உதவியை நாடலாம்.

தோட்டங்களில் இருந்து 52 வீதமானோர் இத்திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். பெயர் இல்லாவிட்டால் எமக்குத் தெரியப்படுத்துங்கள். இல்லையேல் நீங்களாகவே மேன்முறையீடு செய்யலாம். நாமும் தகவல்களைத் திரட்டி வருகின்றோம்.

அஸ்வெசும சமூக நலன்புரி திட்டம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு(Video) | Aswesuma Welfare Protest In Sri Lanka

எனினும், இந்த சமூக நலத்திட்டத்தையும் அரசியல் மயமாக்கி, மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்துவதற்குச் சிலர் முற்படுகின்றனர்.

இது ஏற்புடைய விடயம் அல்ல. தவறுகள் இடம்பெற்றிருந்தால் மக்களை மேன்முறையீடு செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US