குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டம்! இழைக்கப்பட்டுள்ள அநீதி
அஸ்வெசும நிவாரணத் திட்டம் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமேத் தவிர என்றும் பிரச்சினையாக மாறக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஏழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தியில்,
தகுதியான பெறுநர்களைத் தீர்மானிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது ஏற்கனவே சமுர்த்தியைப் பெற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தியுள்ளது.
அநீதிக்கு ஆளான சமுர்த்தி பெறுனர்களுக்கு உதவுவதற்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன். அஸ்வெசும திட்டம் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். என்றும் பிரச்சினையாக மாறக்கூடாது.
அஸ்வெசும பிரச்சினையை கையாளும் போது அரசியல் சார்புகளுக்கு அடிபணியாமல், மனிதாபிமான கண்ணோட்டத்தில் பிரச்சினையை பார்க்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |