பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோயின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நிலவும் கடும் வெப்பமே இதற்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுட்டெரிக்கும் வானிலை
“பாடசாலைகள் விளையாட்டுக் கூட்டங்களுக்குத் தயாராகும் போது, சுட்டெரிக்கும் வானிலைக்கு மத்தியில் குழந்தைகள் பல வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், அவர்கள் ஆஸ்துமா தூண்டுதலால் பாதிக்கப்படுகின்றனர்” என வைத்தியர் எச்சரித்துள்ளார்.
எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், புகைபிடிக்கும் பகுதிகளிலிருந்து குழந்தைகளை விலக்கி வைப்பதன் முக்கியத்துவத்தை வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.
புகைப்பிடித்தல்
புகைப்பிடிப்பது சுவாச சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், குறிப்பாக ஆஸ்துமா உள்ளவர்களுக்கு அதனை அதிகரிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குழந்தை பருவ ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறிகளில் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தொடர்ந்து இருமல் ஆகியவை அடங்கும் என வைத்தியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 28 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
