வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் - அமைச்சர் சரோஜா போல்ராஜ் உறுதி

Badulla Government Of Sri Lanka Sri Lankan Peoples Saroja Savithri Paulraj
By Rakesh Oct 19, 2026 04:15 AM GMT
Report

அரசாங்கம் என்ற வகையில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம் என்றும், தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பதுளை நகரில் நேற்று (18.10.2026) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நிர்வாக அனுபவம் இருக்கவில்லை

அவர் மேலும் உரையாற்றுகையில், அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது எமக்கு நிர்வாக அனுபவம் இருக்கவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும், நாம் தனித்துச் செயற்படவில்லை. கொள்கைப்பூர்வமான ஓர் அரசியல் இயக்கமாக, சட்டத்துக்கு உட்பட்டு வலுவாகச் செயற்படுகின்றோம்.

வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் - அமைச்சர் சரோஜா போல்ராஜ் உறுதி | Assurance Given By Minister Saroja Polraj

கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவொரு அமைச்சரும் தனிச்சையாக முடிவெடுக்கவில்லை. கூட்டாக முடிவெடுத்து, குறைகளைத் திருத்திக் கொண்டு மக்களுக்குச் சேவை செய்ய அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றோம். நாட்டின் ஐந்தாண்டு ஆட்சிக் காலம் நிறைவடையும் போது, உலகிலேயே மிகச் சிறந்த முன்மாதிரி நாடாக இலங்கையை மாற்றுவோம் என்றார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்துத் தொடர்ந்து விளக்கிய அமைச்சர், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 14 இலட்சம் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மூன்று கட்டங்களாக உயர்த்தப்பட்டு வருகின்றது.

மஹாபொல கொடுப்பனவு 

16 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்குத் தலா 6000 ரூபா உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக மாணவர்களுக்கான 'மஹாபொல' கொடுப்பனவு 5000 ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபாவாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுக்கான ஒதுக்கீடு 100 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர் சேவையில் 23 ஆயிரம் பேர் உட்பட ஒட்டுமொத்த அரச சேவையில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் புதிதாக இணைக்கப்பட்டு வருகின்றனர்.

வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் - அமைச்சர் சரோஜா போல்ராஜ் உறுதி | Assurance Given By Minister Saroja Polraj

நன்னடத்தை பராமரிப்பிலுள்ள பிள்ளைகள் 18 வயதைப் பூர்த்தி செய்து சமூகத்தில் இணையும் வரை, அவர்களது கணக்கில் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபா வைப்பிலிடப்படுவதுடன், 18 வயதுக்குப் பின் அவர்களுக்குத் தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டு உதவித்திட்டமும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரப் பலன்களைச் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அனுபவித்து வந்த நிலையை மாற்றி, தற்சமயம் சாமானியப் பொதுமக்களுக்கும் உழைக்கும் பெண்களுக்கும் அப்பலன்கள் சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது என்றார்.

மீண்டும் எரிபொருள் வரிசையில் மக்கள்! விநியோகத்தில் சிக்கல்

மீண்டும் எரிபொருள் வரிசையில் மக்கள்! விநியோகத்தில் சிக்கல்

இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் வருகை

இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் வருகை

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US