மட்டக்களப்பில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஊடக சந்திப்பு
மட்டக்களப்பில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினரின் ஊடக சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த ஊடக சந்திப்பானது இன்று(27.01.2024) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் சங்கத் தலைவி த.செல்வராணி மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் சங்கச் செயலாளர் ச.சுகந்தி, திருகோணமலை மாவட்டவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் சங்கத் தலைவி செ.தேவி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
போராட்டத்திற்கான அழைப்பு
அவர்கள் கூறியதாவது, எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் ஆனால் அன்று எங்களுக்கு கருப்பு தினம் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட அதாவது கருப்பு தினமாகிய சுதந்திர தின நாளில் 8 மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சேர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி பாலம் தொடக்கம் காந்தி பூங்கா வரை போராட்டம் ஒன்று இடம்பெற உள்ளது இந்தப் போராட்டமானது வடக்கிலும் இடம்பெற உள்ளது.
உண்மையில் இன்று சுதந்திர தினம் என்று கூறுகின்றார்கள் எங்கே சுதந்திர தினம் கதைக்க கூட கருத்து வேறுபாடு அற்ற சுதந்திர தினம் இந்த இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது சுதந்திர தினம் என்று சொன்னால் இலங்கை சுதந்திரம் அடைந்த அக்காலம் தொட்டு இன்று வரை தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை.
கிடைக்காத சுதந்திரம்
இன்று தமிழர்களாகிய நாங்கள் எங்களது நமது வாயால் வரும் வார்த்தைகளை கூட வெளியில் சொல்ல முடியாத அளவு சுதந்திரம் இல்லை சுதந்திரமற்ற இலங்கை நாட்டில் சுதந்திர தினம் எதற்கு
இன்று 14 வருடங்களாக எங்களது போராட்டங்களை தொடர்ந்து எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றோம்.
எத்தனை ஜனாதிபதிகள் மாறி மாறி வந்தாலும் எத்தனை பிரதமர்கள் மாறி மாறி வந்தாலும் எங்களுக்கான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை.
நாங்கள் தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருப்பது எமது உயிர்களை பிழை மதிக்கத்தக்க ஒவ்வொரு உயிர்களையும் தொலைத்து விட்டு வீதியில் நின்று 220க்கு மேற்பட்ட தாய்மார்கள் இன்று நிற்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
இதன் போது மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |