ஆசிய கோப்பை 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை
இலங்கை- பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இன்று(13) நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை, பங்களாதேஸ் பலப்பரீட்சை நடத்தின.
பங்களாதேஸ் அணி
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பங்களாதேஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 139 ஓட்டங்கள் எடுத்தது.
பங்களாதேஸ் அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
ஜேகர் அலி 41ஓட்டங்களும், ஷமிம் ஹொசைன் 42 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 2 விக்கெட் கைப்பற்றினார்.
இலங்கை அணி
இதையடுத்து, 140 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பதும் நிசங்கா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார்.
கமில் மிஷாரா 46 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்து முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.




