கேப்டன்சி இன்னிங்ஸில் சதம் கடந்தார் அசலங்க!
இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க தனது நான்காவது ஒருநாள் சதத்தை தனதாக்கியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குறித்த இலக்கை அடைந்துள்ளார்.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள்
எனினும் ஆனால் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் இலங்கை அணியின் முன் வரிசை வீரர்களை களத்தில் நிலைநிறுத்த அனுமதிக்கவில்லை.
இருப்பினும், தனி ஒருவராகப் போராடிய சரித் அசலங்க, போட்டியில் இலங்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
இந்த போட்டியில் அவர், 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் தனது சதத்தை கடந்தார்.
இலங்கை அணி
நிர்ணயித்த 50 ஓவர்களுக்கு இலங்கை அணி 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்படி “கேப்டன்சி இன்னிங்ஸை“ விளையாடிய சரித் அசலங்க 127 ஓட்டங்ளை பெற்று ஆட்டமிழந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
