இளைஞர் சமுதாயத்தின் கையில் நாட்டின் வளர்ச்சி: பிரதி அமைச்சர் கருத்து
ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்நாட்டிலுள்ள இளைஞர் சமுதாயம் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை கொண்ட சமுதாயமாக இருக்க வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற இளம் தொழில் முயற்சியாளர்களை வணிகத்திற்காக ஊக்குவித்தல் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் வழிகாட்டலில் தொழில் முயற்சியில் ஈடுபட்டு ஒரு குறிப்பிட்ட மட்டத்தை அடைந்து முன்னுதாரணமாக இருக்கும் இரு இளம் தொழில் முயற்சியாளர்களின் அனுபவப் பகிர்வும் இதன்போது இடம்பெற்றுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வணிகத் துறை தொடர்பான அரச நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து மிகவும் தெளிவாக துறைசார்ந்த அதிகாரிகளால் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், வங்கி உயரதிகாரிகள், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







