சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவது தொடர்பில் உயர்த்தப்படும் சிவப்புக் கொடிகள்
இந்தியாவின் பாதுகாப்பு இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்திருப்பதால், சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவது தொடர்பில் பல சிவப்புக் கொடிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் [ SOUTH ASIA INSTITUTE FOR POLICY STUDIES - SAIPS ] தெரிவித்துள்ளது.
இது தொடர்பான டுவிட்டர் பதிவொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன கப்பல் தொடர்பில் சர்ச்சை
தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கப்பல் வருவது தொடர்பில் தற்காலத்தில் அதிக சர்ச்சைகள் தோன்றியுள்ளன.
பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இலங்கை வரும் சீன கப்பல் - தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு |
குறிப்பாக இந்த விடயம் தொடர்பில் இந்திய ஆய்வாளர்கள் பலரும் எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இந்திய - இலங்கை உறவுகளை மீண்டும் சீர்குலைக்கும் சீனா! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை |
எனினும் ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீனக் கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக வருகிறதாகவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்றும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அண்மையில் கூறியிருந்தார்.
நட்பின் அடிப்படையில் தீர்வு
இதேவேளை நட்பின் அடிப்படையில் சீன கப்பல் பிரச்சினைக்கு தீர்வைக்காண முயல்வதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன அண்மையில் கூறியிருந்தார்.
நட்பின் அடிப்படையில் சீன கப்பல் பிரச்சினைக்கு தீர்வு!பிரதமர் உறுதி |
இரு நாடுகளும் எங்கள் நெருங்கிய நண்பர்கள், நாங்கள் நட்பு அணுகுமுறையுடன் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Is Indian Ocean becoming another flash point, where India’s dominance is challenged in it’s own backyard? @IndiainSL @DrSJaishankar @USAmbSL @RW_UNP
— SOUTH ASIA INSTITUTE FOR POLICY STUDIES (@SAIP_FORSTUDIES) August 3, 2022
