யாழில் மதுபானம் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை கைப்பற்றிய பொலிஸார்
யாழ்ப்பாணம் -நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தகத்திற்கு மதுபானம் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (3) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மதுபானத்தை படகில் ஏற்றிச் கொண்டு செல்வதற்கான அனுமதி குறிகாட்டுவானில் பெறப்பட்டு அங்கிருந்து படகில் நெடுந்தீவுக்கு கொண்டு வரப்பட்டது.
நடவடிக்கை
இந்தநிலையில், நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து உரிய விருந்தகத்திற்கு அனுமதி மற்றும் இலக்கத்தகடு இல்லாத உழவு இயந்திரத்தில் மதுபானம் ஏற்றப்பட்டவேளையில் பொலிஸாரால் வாகனத்துடன் மதுபானம் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
துறைமுகப் பகுதியில் மதுபானம் இறக்கப்பட்ட நிலையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக நெடுந்தீவில் நின்ற யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் இதனை நேரடியாக அவதானித்து சம்பவ இடத்தில் பிரசன்னமாகி நிலைமையினை ஆராய்ந்தார்.
பின்னர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.
விசாரணை
2025 ஆம் ஆண்டுக்கான மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் இருந்த நிலையில் , அண்மையில் இது தொடர்பாக மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் நெடுந்தீவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலும் அதற்கான முடிவு இன்னும் வழங்கப்படாத நிலையில் அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அதனடிப்படையிலேயே குறித்த தனியார் விருந்தகத்திற்கான மதுபானம் இன்றையதினம் எடுத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
