தேசபந்து விவகாரத்தில் ரணிலுக்கும் - டிரானுக்கும் புதிய சிக்கல்
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் விசாரணை தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் உண்மைகளை சமர்ப்பித்துள்ளார்.
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் நேற்று இடம்பெற்ற விசாரணையின் போதே குறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்,
முற்றிலும் கட்டுக்கதை
" வெலிகம ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு மறுநாள், அப்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த டிரான் அலஸ், தேசபந்து தென்னகோனுடன் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்த துப்பாக்கிச் சூடு ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரைக் கைது செய்யச் சென்றபோது நடந்த ஒரு சம்பவம் என்று கூறினார்.
இது முற்றிலும் கட்டுக்கதை. அன்று இது குறித்து டிரான் அலஸிடம் நாங்கள் விசாரித்தோம். இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.
தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி நெவில் டி சில்வா வழங்கிய தகவலின்படி, அன்றைய செய்தியாளர் சந்திப்பில் குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
ஆனால் எனக்குத் தெரியாது என்று கூறி அவர் தற்போது நழுவிச்செல்ல முயற்சிக்கின்றார். நாங்கள் அதை மேலும் விசாரிப்போம்.
25 இலட்சம் இழப்பீடு
மேலும், சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு டிரான் அலஸ் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் ரணில் விக்கிரமசிங்க 25 இலட்சம் இழப்பீடு வழங்கியுள்ளார்.
அத்தகைய இழப்பீடு எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து ஒரு அறிக்கையைப் பெற நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
எந்தவொரு சரியான அளவுகோலும் இல்லாமல் பொதுப் பணத்திலிருந்து இது செலுத்தப்பட்டது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
