பாடசாலைகளின் பராமரிப்பில் விசேட நடவடிக்கை அவசியம்! ஆளுனர் சுட்டிக்காட்டு
பாடசாலைகளின் பராமரிப்பில் உள்ள நிலைமைகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையிலான மாகாண திணைக்களத் தலைவர்களுlனான விசேட கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வன்னிப் பிராந்தியத்திலுள்ள சில பாடசாலைகளின் சூழல்கள் பற்றைகள் வளர்ந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக குறித்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாடசாலைகளின் பராமரிப்பு
மேலும், மலசலகூடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டிருந்தாலும் அவை பயன்படுத்தப்படாமல் உள்ளமையும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்ட்டது.
இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பதிலளித்த கல்வி அமைச்சின் செயலர், பல இடங்களில் பாடசாலைகளின் பராமரிப்பே சவாலாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையிலேயே வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக எந்தெந்த பாடசாலைகளில் இவ்வாறான நிலைமைகள் உள்ளன என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
