தெல்லிப்பழை வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி மரணம்
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்றையதினம்(3) உயிரிழந்துள்ளார்.
வட்டுத் தெற்கு, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணவேணி (வயது 52) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் கடந்த 26.03 2025 அன்று இரவு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்தார்.
இதன்போது அராலி நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், விளான் சந்தி பகுதியில் அவரது மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
மரண விசாரணை
இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த தாதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
