அமெரிக்க சந்தையில் இலங்கை உற்பத்திகளுக்கு பாதிப்பு : கடும் இலாப இழப்புகள் ஏற்பட வாய்ப்பு
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்க அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி செலவு உயர்வதன் மூலம், அமெரிக்க சந்தையில் இலங்கை உற்பத்திகளின் போட்டித்திறன் குறையக்கூடும். இதனால், ஏற்றுமதி வருமானம் மற்றும் கேள்வி குறைவடையக்கூடும் என்பதோடு, ஏற்றுமதியாளர்களுக்கு இலாப இழப்புகள் ஏற்படக்கூடும், என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 9ஆம் திகதி வரி நடைமுறைக்கு..
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி (Tariff) முறையை குறைக்கும் சாத்தியங்களை ஆராயவும், இருநாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைகள் குறித்த ஒருமித்த முடிவுக்கு வரவும், இந்த பேச்சுவார்த்தை வழியமைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 9ஆம் திகதி வரி நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், குறைப்புகளைப் பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வரிகளைத் தவிர்ப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது" என எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தக கொள்கையை நாம் தவிர்க்க முடியாது. நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் ஏற்கனவே இந்த விடயம் குறித்த கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது சிறப்பான பொருளாதார சூழ்நிலையுடன் கூடிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரி கட்டுப்பாடுகள்
இந்த நெருக்கடி நிலைமைகள் குறித்து அமெரிக்காவிடம் விளக்கக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதகாத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 9க்கு முன்னதாகவே, இந்த வரிகளை குறைக்கும் சாத்தியங்களை கலந்துரையாடல்களின் மூலமாக ஆராயலாம் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வரி கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கையின் ஆடை மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி துறைகளுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க அரசுடன் நடக்கும் கலந்துரையாடல்கள் தோல்வியடைந்தால், GSP+ வசதியின் கீழ் சிறப்பு நன்மைகள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளிட்ட மாற்று தீர்வுகள் குறித்து இலங்கை ஆராயும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நம் சுங்க வரி அமைப்பை எளிமைப்படுத்துவது பற்றியும் சிந்திக்க முடியும். இருநாடுகளுக்கும் நன்மை தரும் நீண்டகால வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை உருவாக்குவதற்கான நோக்குடன், அரசாங்கம் அமெரிக்காவுடன் இராஜதந்திர நிலைகளில் கலந்துரையாட விரும்புகிறது," என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
