அநுர அரசில் தொடரும் வன்முறை! கொழும்பில் பாரிய போராட்டம்
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தற்போதைய அரசாங்கம் நிறுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (3) நடைபெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிக்கையில், அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது ஜனநாயக ரீதியான பேசும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே.
அடக்குமுறை
பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது 27 பேரை கைது செய்துள்ளதுடன் இதுவரைக்கும் பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேசும் உரிமை இல்லையா, போராடும் உரிமை இல்லையா.
தற்போதைய அரசாங்கத்திற்கு உறுதியாக ஒன்றை சொல்கின்றோம். இந்த அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் எமது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
