கொழும்பில் பொலிஸாரினால் அடித்துக் கொல்லப்பட்ட மகன் - தாய் பகிரங்க குற்றச்சாட்டு
கடந்த முதலாம் திகதி வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சத்சர நிமேஷ் என்ற இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டமை அந்த இளைஞனின் மரணத்திற்குக் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் பதுளை மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்தவர் என கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவின் நிர்வாகப் பணிப்பாளர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளர்.
சித்திரவதை
அவரது தாயார் மற்றும் உறவினர்களின் தகவலுக்கமைய, இந்த இளைஞன் பொலிஸ் காவலில் இருந்தபோது பல்வேறு சித்திரவதைகளுக்குள்ளாகியுள்ளார்.
“ஏப்ரல் 2 ஆம் திகதி அந்த இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் தாயாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது, உடல் ஏற்கனவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. மேலும் விசாரணையில், அந்த இளைஞன் அணிந்திருந்த ஆடைகளை கூட பொலிஸார் மறைத்து வைத்திருந்தனர். சில ஆடைகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன.
நிமேஷ் பயன்படுத்திய தொலைபேசி அழிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் அனைத்தும் ஏதோ மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கின்றன. மகன் சிறைச்சாலைக்குள் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தாயாரிடம் கூறியுள்ளனர்.
மருத்துவ பரிசோதனை
எனினும் முல்லேரியா மருத்துவமனை பிணவறையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மருத்துவ பரிசோதனை மூலம் என்ன நடந்தது என்பதை நாம் கண்டுபிடிக்க முடியும். அந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், உடலில் சூடான தன்மை மட்டுமே இருந்ததாக மருத்துவர் தாயாரிடம் கூறினார்.
இந்த இளைஞன் ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதாகவும், ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியைக் கண்டுபிடிக்கச் சென்று கொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டியில் வந்த ஒரு குழுவினரால் துரத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பயந்துபோன அந்த இளைஞன், அருகிலுள்ள வீட்டிற்கு ஓடியுள்ளார். அங்கிருந்தவர்கள், அவரை ஒரு திருடன் என்று நினைத்து, மரத்தில் கட்டி வைத்து, பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர், அன்றைய தினம் அவர் தனது தாயாரை அழைத்து, பொலிஸ் அதிகாரிகளால் தான் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவித்தார்” என சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளர்.

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
