பொதுமக்களுக்கு போக்குவரத்து பொலிஸ் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 590இற்கும் மேற்பட்டோர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் தலைவரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மரண விபத்துக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 565 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளனர்.
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில், வீதி விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் வீதி விபத்துகளில் சராசரியாக தினமும் 7 முதல் 8 பேர் வரை இறக்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
