ஈழத் தமிழ் ஏதிலிகளுக்கு இந்திய குடியுரிமை- ராஜ்சபாவில் வைகோ வலியுறுத்து
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் ஈழத் தமிழ் ஏதிலிகளுக்கு இந்திய குடியுரிமை அல்லது நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் கோரப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைகோ இதனை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் ஏதிலிகள்
தற்போது, கொண்டு வரப்பட்டுள்ள, இது தொடர்பான யோசனையில் உள்நாட்டுப் போரின் போது இலங்கையிலிருந்து இந்தியா வந்துள்ள தமிழ் ஏதிலிகள் கருத்தில் கொள்ளப்படவில்லை.

மண்டபம் மற்றும் பிற அகதிகள் - மறுவாழ்வு முகாம்களில் சுமார் 90,000 தமிழ் ஏதிலிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தவிக்கின்றனர்.
வன்முறை
எனவே அவர்களுக்கு நீண்ட கால விசா வழங்குவதற்கு நடைமுறை அணுகுமுறை மிகவும் அவசியம் என்று வைகோ வலியுறுத்தினார்.

அவர்கள் தங்கள் நாட்டில் நடைபெற்ற வன்முறை மற்றும் இன துன்புறுத்தல் காரணமாக கடவுச்சீட்டுகள் இல்லாமல் தப்பி வந்து, இந்தியாவில் ஏதிலிகளாக தங்கி உள்ளனர்.
எனவே, அவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று முத்திரை குத்தக்கூடாது. இவர்கள் விடயத்தில், 1986 செப்டம்பர் 23 அன்று வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சக உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டார்.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan