இலங்கைக்குள் பறந்து திரியும் இந்திய உலங்கு வானூர்திகள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்காக இந்தியாவில் இருந்து 4 உலங்கு வானூர்திகள் இலங்கை வந்தடைந்துள்ளன.
பிரதமர் மோடி 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, நாளை காலை சுதந்திர சதுக்கத்தில் வரவேற்கப்பட்ட பின்னர், ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறும்.
உலங்கு வானூர்திகள்
இந்த நிலையில் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது பயன்படுத்துவதற்காக நான்கு MI 17 ரக உலங்கு வானூர்திகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் 40 இந்திய விமானப்படை வீரர்களும் இலங்கை வருகைத்தந்துள்ளனர்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை வருகை குறித்து தனது X சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றையும் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
