யாழில் காணியொன்றினுள் அத்துமீறி மரம் வெட்டிய இராணுவத்தினர்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள சேமக்காலை ஒன்றினுள் இராணுவத்தினர் உட்புகுந்து வாகை மரத்தினை வெட்டியுள்ளனர்.
இதன்போது, பிரதேச வாசிகள் மானிப்பாய் பொலிஸார் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு தெரிவித்து இது குறித்து அறிய முற்பட்ட பொழுது, வாகை மரம் வெட்ட எம்மிடம் அனுமதி பெற தேவையில்லை எனவும் தொடர்ந்து மரத்தை கொண்டு செல்வதற்கு தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இராணுவத்தினர் குறித்த தனியார் காணி உரிமையாளரை நாட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் எனவும் பாதிக்கபட்டது சாதாரண பொது மகனாக இருந்ததால் பொலிஸார் உடனடியாக கைது செய்திருப்பர் எனவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
வழித்தட அனுமதி
இதன் பின்னர், இது குறித்து மானிப்பாய் பொலிஸாரை தொடர்பு கொண்ட பொழுது இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வனவள பாதுகாப்பு திணைக்கள யாழ். மாவட்ட அதிகாரி இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாகவும் வாகை மரம் வெட்ட எம்மிடம் அனுமதி பெற தேவையில்லை எனவும் வழித்தட அனுமதியினை மாத்திரமே பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

டெஸ்ட் வரலாற்றில் 1 ரன்னில் த்ரில் வெற்றிகள்: மிகச்சிறிய வித்தியாசத்தில் முடிந்த டாப் 10 போட்டிகள் News Lankasri
