மோடியின் வருகையையொட்டி 11 இந்திய கடற்றொழிலாளர்கள் அவசரமாக விடுவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கைக்கு வருகை தருவதை முன்னிட்டு சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 14 இந்தியா கடற்றொழிலாளர்களில் மூன்று இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எஞ்சிய 11 பேரும் இன்று (4) பகல் அவசர அவசரமாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அவசரமாக விடுவிப்பு
இதனையடுத்து, அவர்களுக்கு எதிரான 'பி' அறிக்கையை விலக்கிக்கொள்வதாக அரச தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தமையை அடுத்து அவர்கள் 11 பேரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
அத்தோடு, 11 பேரும் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக உடனடியாக கொழும்பு மிரிஹானவில் உள்ள புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
