இலங்கையில் மாணவியை கூட்டு பாலியல் சீண்டல் செய்த மாணவர்கள்
15 வயது பாடசாலை மாணவியை கூட்டு பாலியல் சீண்டல் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய 19 வயது இளைஞர் உட்பட 6 சந்தேக நபர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
19 வயது இளைஞன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார். சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட ஆறு பேரை மாகொல சிறுவர் தடுப்பு மையத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாலியல் சீண்டல்
ஏழு சந்தேக நபர்களில் மூன்று பேர் சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
ஏனைய நான்கு பேர் மீது சம்பவத்திற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
