மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு
அம்பாறையில் உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ வீரர் உயிரிழந்தார்.
அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே நேற்று(26.2.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்துடன் குறித்த விபத்தில் காயமடைந்தவர் மற்றுமொரு வாகனத்தில் அம்பாறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
மேலதிக விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் என்பதுடன் இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திரவியல் பட்டாலியனைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ வீரர் விடுமுறையில் பொலன்னறுவைக்குச் சென்று பின்னர் மஹியங்கனையில் உள்ள தனது பாட்டியைப் பார்த்துவிட்டு அம்பாறை பொல்வத்தைக்குத் செல்லும் வழியில் விபத்திற்குள்ளாகியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri