கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்! மரணத்தில் தொடரும் மர்மம்
புதிய இணைப்பு
இரத்மலானை கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தப் பெண் மரணமடைந்த விதம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், இது ஒரு சந்தேகத்துக்குரிய மரணம் என பொலிஸார் கருதுகின்றனர்.
குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் தடயவியல் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலதிக தகவல் - ராகேஸ்
முதலாம் இணைப்பு
கல்கிஸ்ஸை, இரத்மலானை கடற்கரைப் பகுதியில் இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைவிடப்பட்ட மீன்பிடி படகொன்றில் இருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
24 வயதுடைய இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri