மீள்குடியேற்ற செயற்றிட்ட விசேட அதிகாரியாக கீதனாத் நியமனம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற, வீட்டுத்திட்ட மற்றும் புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக காசிலிங்கம் கீதநாத் தனது அதிகாரப்பூர்வ நியமனக் கடிதத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமிருந்து இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமரால் முன்மொழியப்பட்ட வடக்கு,கிழக்கு மாகாணத்திற்கான விசேட அதிகாரியாக கீதனாத்தின் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.
இந்த அதிகாரியின் கீழ் வாழ்வாதாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளைக் கையாள்வது தொடர்பான அதிகாரங்கள் உள்ளடக்கப்படும் என பிரதம அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.
Received my official letter of appointment as the Government’s resettlement facilitator for North & East, from PM @PresRajapaksa. Blessed ? Another great opportunity to serve the people of this country ?? pic.twitter.com/KNF2NCVPbs
— G. Cassilingham (@CassilingamG) June 30, 2021
இதேவேளை,இவர் பிரதமரின் இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.




