நோர்வேயின் - கிறிஸ்டியான்சன்ட் நகருக்கான இலங்கை தூதுவர் நியமிப்பு
நோர்வேயின் கிறிஸ்டியான்சன்ட் நகருக்கான இலங்கை தூதுவராக கர்ட் மோஸ்வோல்ட் (Kurt Mosvold) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கான நோர்வே தூதுவர் தர்சன எம். பெரேரா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் வழங்கப்பட்ட நியமனக்கடிதம் மற்றும் நோர்வேயின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை என்பன மொஸ்வோல்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட கால இருப்பு
கர்ட் மோஸ்வோல்ட் தென்னிலங்கையில் சொத்து மதிப்புக்களுடன் இலங்கையின் சுற்றுலாத் துறையில் வலுவான மற்றும் நீண்டகால இருப்பைக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் கல்வி, தொழில் பயிற்சி போன்ற பல சமூக மேம்பாட்டு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இலங்கையின் தூதராக மோஸ்வோல்டின் பங்கு, குறிப்பாக சுற்றுலா மற்றும் பொருளாதார முயற்சிகளிலும் நோர்வேயுடனான இலங்கையின் தற்போதைய ஈடுபாட்டை மேலும் மேம்படுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் பிராந்தியத்தில் உள்ள இலங்கை சமூகத்தின் நலன்கள் மற்றும் தேவைகளை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |