பழிவாங்கும் அரசியலால் நாட்டை முன்னேற்ற முடியாது! பிணையில் வந்த எம்.பி பகிரங்கம்
அநுர அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டுவதை விடுத்து, முன்னாள் ஆட்சியாளர்களையும், அரச அதிகாரிகளையும் பழிவாங்கும் அரசியலையே முன்னெடுத்து வருகின்றது என ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பல்பிட்ட குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுஷ பல்பிட்டவைக் கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் நேற்று(20.02.2026) பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அநுர அரசு பழிவாங்குகிறதா?
அவர் மேலும் கூறியதாவது,
தற்போதைய அரச நிர்வாகத்தில் எந்த விதமான திட்டமிடலும் இல்லை. அனுபவம் வாய்ந்த அரச அதிகாரிகளை இலக்கு வைத்து, அவர்களுக்கு எதிராகச் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பையும் அரசு சீர்குலைத்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக நேர்மையான அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்றும் சூழலே நிலவுகின்றது. எனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையும் இல்லை.
சட்டத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக எம்மைப் போன்ற அதிகாரிகளை நீதிமன்றக் கூண்டில் ஏற்றுவது கவலைக்குரிய விடயமாகும்.
அத்துடன், பழைய சம்பவங்களைக் கிளறிப் பார்ப்பதை விடுத்து, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும். பழிவாங்கும் அரசியலால் நாட்டை முன்னேற்ற முடியாது என்றார்.
நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்
ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை.. நடிகர் மீசை ராஜேந்திரன் வீட்டு திருமணம்.. வீடியோ இதோ Cineulagam