ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றால் போராட்டங்கள் வெடிக்கும்! ஜேவிபியின் தலைவர் எச்சரிக்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றினை நடத்தி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் மேலும் போராட்டங்கள் வெடிக்கும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்றால் நாட்டில் மேலும் போராட்டங்கள் வெடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் யோசனைகளுக்கமைய புதன்கிழமை அமைச்சர்களின் வாக்கெடுப்பினை பெற்று புதிய ஜனாதிபதியினை தெரிவு செய்து நாட்டினை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.