சைப்ரஸ், ஆர்ஜென்டினா, ஸ்லோவேனியா ஜனாதிபதிகளுடன் அநுர சந்திப்பு
அமெரிக்க வர்த்தக சபையின் சிரேஷ்ட உப தலைவரும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவருமான அதுல் கேஷப்பை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி, இந்தச் சந்திப்பில் ஈடுபட்டார்.
முக்கிய சந்திப்பு
இதன்போது, இருவரும் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
விசேட இரவு விருந்து
சைப்ரஸ் ஜனாதிபதி, ஆர்ஜென்டினா ஜனாதிபதி மற்றும் ஸ்லோவேனியா ஜனாதிபதி ஆகியோரை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்துள்ளார்.
நியூயோர்க்கில் அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய விசேட இரவு விருந்தில் ஜனாதிபதி அநுரகுமாரவும் கலந்துகொண்டார்.
இதன்போதே, சைப்ரஸ் ஜனாதிபதி Nikos Christodoulides, ஆர்ஜென்டினா ஜனாதிபதி Javier Milei மற்றும் ஸ்லோவேனியா ஜனாதிபதி Nataša Pirc Musar ஆகியோரை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.





