கனடாவில் 10 எம்பிக்களை உருவாக்குவதில் அநுரவின் இரகசிய நகர்வு..
கனடாவிற்கு கடந்த ஆண்டு ஜனாதிபதி அநுர விஜயம் மேற்கொண்டிருந்தார்.இந்த விஜயமானது கனடாவிலுள்ள சிங்கள மக்களிடம் எழுச்சியையும் திரட்சியையும் ஏற்படுத்தியிருந்தது என்று கனடா அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“அதனை தொடர்ந்து அங்கு ஒரு வலையமைப்புகள் உருவாக்கப்பட்டு பல செய்திகள் பரிமாறப்பட்டு வருகின்றன.
தங்கள் சார்ந்த ஒரு சமூகத்தில் முன்னெடுப்பை அவர்கள் செய்கின்றார்கள்.
10 நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்களுடைய சமூகம் சார்ந்தவர்களாக கனடாவில் உருவாக்க வேண்டும், என்ற பொறிமுறையை உருவாக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறார்கள்” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
