கனடாவில் மற்றுமொரு தமிழின அழிப்பு நினைவகம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை டொரோன்டோ(Toronto) நகரத்தில் அமைப்பதற்கான தீர்மானம் டொரோன்டோ நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
Scarborough தென்மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் இந்தத் தீர்மானத்தை முன்வைத்துள்ளார்.
தமிழின அழிப்பு நினைவகம்
டொரோன்டோவில் தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை அமைப்பதற்கு தமிழ் சமூகத்துடன் இணைந்து Toronto நகரசபை பணியாற்ற இந்தத் தீர்மானம் கோரப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை நகரசபை உறுப்பினர் Josh Matlow வழிமொழிந்துள்ளார்.
தனது தீர்மானத்தை Toronto நகர சபை ஏகமனதாக நிறைவேற்றியதில் பெருமை கொள்கிறேன் என வாக்கெடுப்பின் முடிவில் பார்த்தி கந்தவேள் தெரிவித்தார்.
இனப்படுகொலை
இந்த தீர்மானத்தை ஏகமனதாக ஆதரித்த நகர முதல்வர் Olivia Chow உட்பட ஏனைய நகரசபை உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
Hey @ParthiKandavel @JoshMatlow @oliviachow Great news back in Jan 20, 2021 when I moved the motion at #Brampton Council I was very proud to support the #Tamil community in Brampton and around the world acknowledging in a meaningful manner their painful history. Well done… https://t.co/YotNVAt0j7
— Martin Medeiros (@medeiros_martin) May 23, 2025
இந்த நினைவகம் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஒருபோதும் மறைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என பார்த்தி கந்தவேள் நம்பிக்கை தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் வசிக்கும் Scarborough-வில் இந்த நினைவகம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri
