ஆப்பிள் நிறுவனத்துக்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
இந்தியாவில் ஐபோன்களை தயாரித்தால் 25 சதவீத வரி விதிக்க நேரிடும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அங்கேயே தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஐபோன் தயாரிப்பு
அத்தோடு, இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை தாம் விரும்பவில்லை எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
