திடீரென மட்டக்களப்பில் மீண்டும் சுற்றிவளைக்கப்பட்ட பிள்ளையான் குழு
அநுர அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் நாட்டில் தொடர்ந்து கைதுகள் இடம்பெறுகின்றன, தடுப்பு காவல்கள் தொடர்கின்றன, குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் தீவிரமாகின்றன.
இதனடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் தற்போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்புபட்ட பல கொலை மற்றும் கொள்ளைகள் தொடர்பிலான விடயங்கள் குறித்து, குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினர் களத்திற்கு சென்று நேரடியாகவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்,காத்தான்குடி பகுதியில் சாந்தன் படுகொலை, கல்லடி பாலம் பகுதியில் இடம்பெற்ற பொலிஸ் சக்தியின் படுகொலை என பல விடயங்கள் குறித்து பிள்ளையானிடம் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இதற்கமைய, பிள்ளையான் விவகாரத்தில் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 11 மணி நேரம் முன்

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri
