தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறு! காணி விவகாரம் குறித்து சம்பந்தனின் கருத்தை நினைவுகூறும் ஊடகவியலாளர்

13th amendment R. Sampanthan Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Chandramathi May 29, 2025 02:46 PM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report
Courtesy: ஊடகவியலாளர் அ.நிக்ஸன்

வட மாகாணத்தில் காணித் தீர்வு தொடர்பாக, 2025, மார்ச் 28 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றமை தற்போது இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

முன்னதாக, வட மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள காணி உரிமை தீர்வுத் திணைக்களைத்தால், இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாளை கஜேந்திரகுமார் - சுமந்திரன் சந்திப்பு

நாளை கஜேந்திரகுமார் - சுமந்திரன் சந்திப்பு

இந்நிலையில் வட மாகாண காணி தீர்வு குறித்து முன்னதாக சம்பந்தன் ஐயா கூறிய கருத்துக்கள் மற்றும் இந்த காணி பிரச்சினை குறித்து இலங்கை அரசாங்கத்தின் நோக்கம் எதுவாக இருந்தது என்பது தொடர்பில் ஊடகவியலாளர் அ.நிக்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில்,''13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் தும்புத் தடியாலும் தொட்டுப் பார்க்கமாட்டார்கள்” என்று அமரர் சம்பந்தன் 2006 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

13 ஆவது திருத்தச் சட்டம்

ஆங்கில மொழியில் உரத்த சத்தத்தில் சுட்டிக்காட்டிய சம்பந்தன், தமிழர்களின் அரசியல் போராட்டம் மற்றும் தீர்வுத் திட்டம் என்ற பெயரில் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறுகளை விளக்கியிருந்தார்.

தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறு! காணி விவகாரம் குறித்து சம்பந்தனின் கருத்தை நினைவுகூறும் ஊடகவியலாளர் | 13Th Amendment Act And Tamil People

இனப்பிரச்சினைத் தீர்வுக்காக மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த தீர்வு திட்டம் தொடர்பான விவாதத்திலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு விபரித்திருந்தார்.

ஆனால், 2013 இல் வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு நீதியரசர் விக்னேஸ்வரனை கேட்டது, சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

கொழும்பில் உள்ள அவருடைய இல்லத்துக்குச் சென்று அழைப்பு விடுத்திருந்தனர்.

காரண - காரிய விளங்கங்கள்

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளமை பற்றி அப்போது சம்பந்தன் கொடுத்த மிக நுட்பமான காரண - காரிய விளங்கங்களில் தவறான பல கற்பிதங்கள் இருந்தன.

தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறு! காணி விவகாரம் குறித்து சம்பந்தனின் கருத்தை நினைவுகூறும் ஊடகவியலாளர் | 13Th Amendment Act And Tamil People

1) 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் காணி அதிகாரம் இருப்பது என்பது ஒரு வெறும் தோற்றம் (Mere Appearance) மாத்திரமே.

2) கொழும்பு அரச நிர்வாகத்தை மையமாகக் கொண்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு, காணி பற்றிய முழுமையான தீர்மான அதிகாரங்களும் உண்டு.

3) காணி தொடர்பான தேசிய கொள்கை இதுவரை வகுக்கப்படவில்லை. மாகாண பிரதிநிதிகளை உள்ளடக்கிய காணி தொடர்பான ஆணைக்குழு இல்லை.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு

இந்த நிலையில் வடபகுதியில் பொது மக்களின் காணியை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டமையானது, ”எடுப்போம் -தருவோம் - மீளப் பெறுவோம்” என்ற அதிகார ஆணவத்தை வெளிக்காட்டியது எனலாம்.

ஏதோ சிங்கள மக்களின் காணிகளை தமிழர்களிடம் விட்டுக் கொடுப்பது போன்ற ஒரு பிரம்மையும் (Delusion) அதில் உண்டு. இப் பின்னணியில் வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டமைக்கு சில தமிழ் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தமை அடிமைத்தன (Slavery) வெளிப்பாடு.

'Assignment Colombo' என்ற நூலில்...

அப்போது தூதுவராக இருந்த ஜே.என்.டிக்சிற் எழுதிய 'Assignment Colombo' என்ற நூலில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் உண்டு.

குறிப்பாக வடக்கு கிழக்கு ”வரலாற்று வாழ்விடங்கள்” (Historic Habitats) என்றுதான் ஒப்பந்த்தில் இருப்பதாக டிக்சிற் தனது நூலில் விளக்குகிறார்.

தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறு! காணி விவகாரம் குறித்து சம்பந்தனின் கருத்தை நினைவுகூறும் ஊடகவியலாளர் | 13Th Amendment Act And Tamil People

''தமிழர்களின் தாயகப் பிரதேசம்” (The traditional homeland of Tamils) என்று ஒப்பந்தத்தில் எழுத ஜேஆர் விரும்பவில்லை. பிடிவாதமாக நின்றார்.

இதனால் ”Historic Habitats” என்ற வார்த்தையை தேடிக் கண்டு பிடித்து ஒப்பந்தத்தில் புகுத்தியதாக டிக்சிற் தனது நூலில் சுட்டிக்காட்டுகிறார்.

குருந்தூர்மலை பகுதியில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளுக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

குருந்தூர்மலை பகுதியில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளுக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சிங்கள குடியேற்றத்துக்கு வசதியாகவே வரலாற்று வாழ்விடங்கள் என்ற வாக்கியம் கண்டுபிடிக்கப்பட்டது போலும். இப் பின்னணியில் காணி அதிகாரம் எம்மாத்திரம்? டிக்சிற் எழுதிய நூல் தமிழர்களுக்குச் சாதகமானது என்பது எனது வாதமல்ல.

ஆனால், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று ஒப்பந்தத்தில் இருப்பதாக அடிக்கடி எழுதும் சில தமிழ் ஆய்வாளர்கள் டிக்சிற்றின் நூலை வாசிக்க வேண்டும்.'' என பதிவிட்டுள்ளார்.    


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US