குருந்தூர்மலை பகுதியில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளுக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் இன்றையதினம்(29) உத்தரவிட்டுள்ளார்.
குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் குறித்த காணியின் உரிமையாளர் சசிகுமார் என்பவர் தனது இரு பணியாட்கள் ஊடாக உழவியந்திரத்தின் மூலம் மே மாதம் 10 திகதி குருந்தூர் மலைபகுதியில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, புத்த துறவி கல்கமுவ சாந்தபோதி தேரர் தொல்பொருள் திணைக்களத்துக்கு முறைப்பாடு அளித்திருந்தார்.
ஜூன் 5 ஆம் திகதிவரை விளக்கமறியல்
அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இரு விவசாயிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணையின் பின்னர் மே மாதம் 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு, தொடர்ந்து மே 29 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டநீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு மீண்டும் ஜூன் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri