கனடா மே 18 நினைவு தூபி சேதம்..! அதிகாலையில் நடமாடிய மர்ம நபர்கள் - பொலிஸ் விசாரணை தீவிரம்!
கனடா பிரம்டனில் அமைந்துள்ள மே 18 நினைவு தூபிக்கு அருகில் உள்ள மின்குமிழ்களை முகத்தை மறைத்த இரண்டு நபர்கள் வந்து சேதப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(27.05.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
எனினும், இது தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய அறிக்கையை கனேடிய பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.
சம்பவம் நடைபெற்ற போது கிடைத்த சிசிடிவி காணொளிகளை வைத்தே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணை முடிவடையும் வரை எதனையும் உறுதியாக கூற முடியாத நிலை இருப்பினும், தூபி அமைக்கப்பட்ட போது அதற்கு எதிராக இருந்த பலர் மீது வெளிப்படையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்: வெளியான வீடியோ! News Lankasri
