கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு

Mullaitivu Sri Lanka
By Shan May 29, 2025 11:27 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவு பெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் இன்றையதினம் (29.05.2025) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன், காணாமல் போனோர் அலுவலகம் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் கருத்து

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி தாெடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது சட்டவைத்திய அதிகாரி குழுவினரால் தயாரிக்கப்பட்ட முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக இந்த அறிக்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 52இன் வயது, பாலினம், இறப்புக்கான காரணம் என முக்கிய விபரங்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

இங்கே நீதிமன்ற நடவடிக்கையின்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இறந்தவர்கள் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் அவர்களை மேலும் அடையாளம் காணும் முகமாக நீதவானால் காணாமலாக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிகள், காணமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு அவர்களை கண்டறிய உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான காரணங்களாக குண்டுவெடிப்பு, சூட்டுக்காயங்கள் இருந்தது. சில எலும்புக்கூடுகளில் சில பகுதிகளே இருந்தமையால் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இவ் வழக்கானது அடுத்த தவணைக்காக ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சட்டத்தரணியின் தகவல்

இலங்கை வங்கியின் அனைத்து கிளைகளின் சேவைகளும் இன்று முடக்கம்!

இலங்கை வங்கியின் அனைத்து கிளைகளின் சேவைகளும் இன்று முடக்கம்!

குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன் கருத்து தெரிவிக்கையில், கொக்குதொடுவாய் மனித புதகுழி வழக்கு இன்றையதினம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏற்கனவே சட்ட வைத்திய அதிகாரிகளினால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட இருந்தது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

இன்று சட்ட வைத்திய அதிகாரியின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இறந்த மண்டை ஓட்டு தொகுதிகளில் எத்தனை ஆண்கள்? எத்தனை பெண்கள்? இறப்புக்கான காரணங்கள் போன்ற விவரங்களும் சம்பவத்திற்கான விடய தானங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த இறுதி அறிக்கைகளை அடுத்து காணவனமால் போனோர் அலுவலகத்தின் இந்த இறுதி அறிக்கைகள் காணப்படுகின்ற இலக்கங்கள், அதாவது தமிழீழ விடுதலை புலிகளுடைய இலக்கமான கருதப்படும் இலக்கங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்க இருக்கிறார்கள்.

மகிந்தானந்தவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மகிந்தானந்தவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அந்த பிரசுரத்தின் பிற்பாடு இது தொடர்பான , தொடர்புடைய மக்கள் நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற பதிவாளரிடம் இது சம்பந்தமாக தெரிவிக்கும் போது மேற்கொண்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட இருக்கின்றது. ஆகவே இந்த இறுதி அறிக்கையை வைத்துக்கொண்டு காணாமல் போனோர் அலுவலகம் பத்திரிகை பிரசுரத்தின் பிற்பாடு இது தொடர்பான முடிவுகளை எடுக்க இருக்கிறது என தெரிவித்தார். 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US