நாமலின் குடும்பம் பற்றி முகத்தில் கூறுவதை தவிர்த்த அநுரகுமார
தேர்தல் செயலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுடன் (Namal Rajapaksa) இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்பானது, ஒரு சாதாரண அரசியல் சம்பவம் என கூறிய அவர்,
”நாங்கள் சிறப்பாக எதுவும் விவாதிக்கவில்லை. நான் தான் 'மல்லி (தம்பி) எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்டேன்.
நான் விரும்பினால், அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் பொது நிதியைக் கொள்ளையடித்துள்ளனர் என்பதை நான் அவரது முகத்தின் முன் கூறியிருக்க முடியும்.
மக்கள் விமர்சனம்
ஒருவர் கைகுலுக்கினால் எழுந்து நின்று ஏற்றுக்கொள்வது சாதாரண மனித குணம். ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கைகுலுக்க மறுத்த சம்பவத்தை மக்கள் எவ்வாறு விமர்சிக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறீர்கள்.அவர் எவ்வளவு கர்வமாக இருந்தார் என்பதையும் மக்கள் விமர்சிக்கிறார்கள்.

இந்த நிலையில் 'நாங்கள் செய்தது சரிதான், கைகுலுக்க மறுப்பது தவறு" என தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
தங்கமகள் சீரியலை தொடர்ந்து யுவன் மயில்சாமி நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புதிய விவரம் Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ Cineulagam